வெயில், மின்தடை, புதர்த் தீ: அவதிப்படும் ஆஸ்திரேலியர்கள்

ஆஸ்திரேலியாவில் 45 டிகிரி செல்சியசுக்கு மேல் வெயில் வாட்டி வரும் நிலையில் நேற்று மின்சாரமும் தடைபட்டதால் விக்டோரியாவில் கிட்டத்தட்ட 200,000 பேர் புழுக்கத்தில் தவிக்க நேரிட்டது. விக்டோரியா முழுவதும் மின்தடை காரணமாக இருளில் மூழ்கிவிடக்கூடாது என்பதற்காக குறிப்பிட்ட சில இடங்களில் மட்டும் மின்விநியோகம் நிறுத்தப்பட்டதாக தேசிய எரிசக்திச் சந்தை ஆணையம் தெரிவித்தது. இதனிடையே, தாஸ்மானியாவில் கொழுந்துவிட்டு எரியும் புதர்த் தீயை அணைக்க அதிகாரிகள் கடுமையாகப் போராடி வருகின்றனர். நேற்று மட்டும் அங்கு எட்டுவிதமான தீ அவசரநிலை எச்சரிக்கை விடுக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது. இதனிடையே, வெப்பநிலை 45 டிகிரிக்கு மேல் உயர்ந்ததால் அடிலெய்டில் உள்ள ‘ரெட் லயன்’ ஹோட்டல் இலவசமாக பீர் வழங்கியதால் வெயிலைப் பொருட்படுத்தாது மக்கள் அந்த ஹோட்டலை நோக்கி படையெடுத்தனர். படம்: ராய்ட்டர்ஸ்

இப்பகுதியில் மேலும் செய்திகள்

விமானத்தின் கூரைக்குத் தூக்கி எறியப்பட்டார்  அந்த விமானத்தின் சிப்பந்தி. படம்: காணொளி ஸ்கிரீன்கிராப்

19 Jun 2019

மோசமான வானிலை காரணமாக ஆட்டம் கண்ட விமானம்: விமானத்தின் கூரைக்கு வீசப்பட்ட சிப்பந்தி

அடுத்த வாரம் ஜப்பானில் நடக்கவுள்ள உச்சநிலை மாநாட்டில் அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப்பும் சீன அதிபர் சீ ஜின்பிங்கும் சந்திக்கவுள்ளனர்.
படம்: ராய்ட்டர்ஸ்

19 Jun 2019

ஜி20 மாநாட்டில் சீன அதிபரைச் சந்திக்க இருப்பதாகக் கூறியுள்ள டிரம்ப்

அடுத்த வாரம் ஜி-20 நாடுகளின் உச்சநிலை மாநாடு ஜப்பானின் ஒசாகா நகரில் நடக்கவுள்ளது. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

19 Jun 2019

ஜி-20 உச்சநிலை மாநாட்டில் வர்த்தகமும் உலக வர்த்தக நிறுவனத்தின் சீரமைப்பும் விவாதிக்கப்படும்: ஜப்பான்