இன்று கேமரன் மலை இடைத்தேர்தல்

கோலா லிப்பிஸ்: மலேசியாவின் கேமரன் மலை நாடாளுமன்றத் தொகுதிக்கு இன்று இடைத் தேர்தல் நடைபெறவிருக்கிறது.
ஆளும் பக்கத்தான் ஹரப்பான் சார்பில் ஜனநாயகச் செயல் கட்சியின் எம்.மனோகரன் போட்டி யிடுகிறார். தேசிய முன்னணி வேட்பாளராக ரம்லி முகம்மது நூர் நிறுத்தப்பட்டுள்ளார். சலேகுதீன் அப் தலிப், வோங் செங் யீ என இரு சுயேச்சைகளும் களத்தில் இருப்பதால் அங்கு நான்கு முனைப் போட்டி நிலவுகிறது.
அத்தொகுதியில் மொத்தம் 32,009 வாக்காளர்கள் உள்ளனர். தானா ராத்தாவில் 17, ஜெலாயில் 12 என மொத்தம் 29 வாக்களிப்பு நிலையங்களில் வாக்காளர்கள் தங்களின் வாக்குகளைச் செலுத்த லாம். காலை 8 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கும்.
கிட்டத்தட்ட 70% வாக்காளர் கள் தங்களது வாக்குகளைச் செலுத்தலாம் என எதிர்பார்ப்பதாக தேர்தல் ஆணையத்தின் தலைவர் அசார் அஸிஸான் ஹாரூண் தெரிவித்துள்ளார். தேர்தல் முடிவு கள் இரவு 10 மணிக்குள் வெளி யாகலாம் என்றும் அவர் சொன் னார்.
மலேசியாவில் நடந்த 14வது பொதுத் தேர்தலின்போது கேமரன் மலைத் தொகுதியில் தேசிய முன்னணி வேட்பாளராகப் போட் டியிட்ட சி.சிவராஜா வெற்றி பெற்றார்.
ஆனால், வாக்காளர்களுக்கு லஞ்சம் தந்து வாக்குகளைப் பெற்றதால் அவரது வெற்றி செல்லாது என தேர்தல் நீதிமன்றம் அறிவித்தது. அப்போது, திரு சிவராஜா 10,307 வாக்குகளையும் எதிர்த்துப் போட்டியிட்ட திரு மனோகரன் 9,710 வாக்குகளையும் பெற்றனர்.
இதனிடையே, திரு மனோகர னுக்கு ஆதரவாக நேற்று அத்தொ குதியில் வாக்குச் சேகரித்த மலேசிய பிரதமர் மகாதீர் முகம்மது, "பூர்வகுடிகளைச் சேர்ந்த ஒரு வரை தேசிய முன்னணி வேட் பாளராக நிறுத்தியிருப்பது, அவர் கள் மீதான அக்கறையால் அல்ல. அவர்களின் அக்கறையெல்லாம் பதவி மட்டுமே," என்றார்.
அம்னோவுக்கு எதிர்காலம் இல்லை என்ற டாக்டர் மகாதீர், "நான் 22 ஆண்டுகாலம் அம்னோ தலைவராக இருந்தபோது பணத் தைச் சுருட்டவில்லை. கட்சி மாறிவிட்டதால்தான் அதிலிருந்து நான் வெளியேறினேன். அம்னோ இப்போது கொள்ளைக்காரர்களின் கட்சியாக மாறிவிட்டது," என்றும் சாடினார்

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!