மலேசியாவில் நுழைய 85,000க்கும் மேற்பட்டோருக்கு அனுமதி மறுப்பு

கோலாலம்பூர்: மலேசியாவுக்கு கடந்த ஆண்டு வருகைபுரிந்த 22.6 மில்லியன் வெளிநாட்டுப் பயணிகளில் 85,964 பேருக்கு நுழைவு அனுமதி மறுக்கப்பட்டதாக அந்நாட்டின் குடிநுழைவுத் துறை தெரிவித்தது. அவர்களில் ஆக அதிகமானோர் இந்தோனீசியர்கள் (43,870). அடுத்த நிலைகளை இந்தியர்களும் (12,808) சீனர்களும் (8,119) பிடித்தனர். மலேசியாவுக்கு வருவோர் அங்கிருந்து வெளியேறுவதற்கான பயணச்சீட்டைக் காட்டவேண்டும் என்றும் அவர்கள் எங்கு தங்கவுள்ளனர், எவ்வளவு பணம் வைத்துள்ளனர் போன்ற விவரங்களைத் தெரிவிக்க வேண்டும் என்றும் உள்துறை இணை அமைச்சர் முகம்மது அஸிஸ் ஜம்மன் கூறினார். அங்கு வரும் பயணிகளில் 20 முதல் 30 விழுக்காட்டினர் மீண்டும் நாடு திரும்புவதில்லை எனக் கூறப்படுகிறது.

இப்பகுதியில் மேலும் செய்திகள்

மலேசிய முன்னாள் பேரரசர் சுல்தான் முகம்மது, ரஷ்யாவைச் சேர்ந்த ரிஹானா ஒக்சானா தம்பதியின் திருமண வாழ்க்கை ஓராண்டு காலம் மட்டுமே நீடித்தது. படம்: ரிஹானா/இன்ஸ்டகிராம்

21 Jul 2019

மலேசிய முன்னாள் பேரரசர், ரஷ்ய முன்னாள் அழகி தம்பதியின் விவாகரத்தை உறுதிசெய்த சிங்கப்பூர் வழக்கறிஞர்