அதிபர் டிரம்ப் பணிந்தார்; வெற்றி என ஜனநாயக் கட்சி கொக்கரிப்பு

வா‌ஷிங்டன்: குடியரசுக் கட்சியைச் சேர்ந்த அதிபர் டோனல்ட் டிரம்ப்பும் ஜனநாயக் கட்சியினரும் பிடிவாதம் பிடித்ததால் அமெரிக்காவின் அரசுத்துறைகள் ஒரு மாதமாக முடங்கிக் கிடந்தன.
இந்த நிலையில் நிர்வாக முடக்கத்துக்கு தற்காலிக தீர்வு காணும் ஒப்பந்தத்துக்கு அதிபர் டிரம்பு சம்மதம் தெரிவித்துள்ளார்.
இந்தக் குறுகியகால ஒப்பந்தம் பிப்ரவரி 15ஆம் தேதி வரை அரசுத்துறைகள் செயல்படுவதற்கு வழி வகை செய்கிறது.
முன்னதாக சட்டவிரோத குடி யேறிகளைத் தடுப்பதற்காக அமெரிக்க-மெக்சிகோ எல்லையில் தடுப்புச் சுவர் அமைக்கும் தனது திட்டத்திற்கு 5.7 பில்லியன் டாலர் நிதி ஒதுக்கினால் மட்டுமே அர சாங்க முடக்கத்திற்கு தீர்வு காணும் ஒப்பந்தத்தை ஏற் பேன் என்று அதிபர் டிரம்ப் பிடிவாத மாகக் கூறியிருந்தார்.
இதனால் அரசாங்கத் துறைகளின் ஒரு பகுதி நிதியின்றி முடங்கியது. அரசாங்க அமைப்பு களில் பணியாற்றும் ஏறக்குறைய  800,000 பேர் சம்பளமின்றி தவித் தனர். இவர்களில் சிலர் விடு முறையில் அனுப்பப்பட்டனர். பலர் சம்பளமின்றி வேலை பார்த்தனர்.
இந்த நிர்வாக முடக்கம் 35வது நாளாக நீடித்த வேளையில் அதிபர் டிரம்ப் பணிந்துள்ளார்.
அரசுத் துறைகளுக்கு தற்காலி கமாக நிதி ஒதுக்கும் உடன் பாட்டை ஏற்றுக் கொள்ள அவர் முன்வந்துள்ளார்.
இதையடுத்து தங்களுக்கு வெற்றி கிடைத்துள்ளதாக ஜன நாயகக் கட்சியினர் முழக்கமிட்டு வருகின்றனர்.
இதற்கிடையே பேசிய அதிபர் டிரம்ப், “சக்திவாய்ந்த சுவர் அல் லது எஃகுத் தடுப்புகளை கட்டு வதைத் தவிர எங்களுக்கு வேறு வழியில்லை. இதற்கு நியாயமான ஒப்பந்தம் ஏற்படவில்லையென்றால் பிப்ரவரி 15ஆம் தேதி அரசாங்கம் மீண்டும் முடங்கும் நிலைஏற்படும்,” என்றார்.