கனடாவிலிருந்து தாயார், உறவினர் இந்தியாவுக்கு நாடு கடத்தல்

ஒட்டாவா: கௌரவக் கொலையில் தொடர்பிருக்கலாம் என்று நம்பப்படும் தாயாரும் அவரது உறவினரும் கனடாவி லிருந்து இந்தியாவுக்கு நாடு கடத்தப்பட்டனர். கடந்த 2000ஆம் ஆண்டில் பஞ்சாப் மாநிலத்தில் 25 வயது இளம் பெண் கழுத்து அறுபட்டுக் கொல்லப்பட்டார். இதில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கனடிய குடியுரிமை பெற்ற தாயார் மல்கிட் கவுர் சித்து, அவரது உறவினர் சுர்ஜித் சிங் ஆகிய இருவரும் இளம் பெண்ணைக் கொன்றுவிட்டதாக இந்திய அதிகாரிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.