சீனா பாய்ச்சல்: ஹுவாவெய் விவகாரத்தில் அநியாயம்

பெய்ஜிங்: சீனாவின் பிரபல தொலைத் தொடர்பு நிறுவனமான ஹுவாவெய் தயாரிக்கும் பொருட் களுக்கு சில நாடுகள் தடை விதித்திருப்பது நியாயமற்ற செயல் என்று சீன வெளியுறவு அமைச்சர் சாடியிருக்கிறார்.
ஹுவாவெய் நிறுவனத்தின் பொருட்களை தவிர்க்கும் நாடு களின் பட்டியலில் வோடாஃபோன் குழுமம் சேர்ந்துள்ள வேளையில் அமைச்சரின் கருத்து வெளியாகி யுள்ளது. “தேசிய அளவில் சக்தி யைப் பயன்படுத்தி களங்கத்தை ஏற்படுத்துவது, ஆதாரமில்லாமல் குறிப்பிட்ட நிறுவனத்துக்கு எதி ராக நடவடிக்கைகளை எடுப்பது ஆகிய இரண்டும் நியாயமற்றது, நெறியற்றது,” என்று பிரான்ஸ், இத்தாலி சுற்றுப் பயணத்தை முடித்துக் கொண்டு பேசிய வெளியுறவு அமைச்சர் வாங் யி சொன்னார். ஒவ்வொரு நாட்டுக் கும் தனது நாட்டின் தகவல்களைப் பாதுகாப் பதற்கு உரிமையிருக் கிறது. என்றாலும் அந்த உரி மையை தவறாகப் பயன்படுத்தக் கூடாது என்றும் அவர் கூறியதாக சீன வெளியுறவு அமைச்சின் இணையப்பக்கம் தெரிவித்தது.