‘காணாமல் போனவர்களைத் தேடி மீட்கும் சாத்தியம் குறைவு’

புருமடின்ஹோ: பிரேசிலில் இரும்புத்தாது சுரங்கத்தின் அருகே கடந்த வெள்ளிக்கிழமை அணைக்கட்டு உடைந்ததால் கசிந்த கழிவுப்பொருட்களில் சிக்கிக்கொண்டவர்களில் ஏறக்குறைய 50 பேர் இதுவரை மீட்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 
இதற்கிடையே, காணாமல் போனவர்களைத் தேடி மீட்கும் சாத்தியம் குறைந்து வருவதாக அதிகாரிகள் கூறியுள்ளனர். இச்சம்பவத்தில் குறைந்தது 34 பேர் உயிரிழந்துவிட்டதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
கிட்டத்தட்ட 300 பேரை இன்னும் காணவில்லை என்பதால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என்று அஞ்சப்படுகிறது.