ஃபிஜி தீவு அருகே நிலநடுக்கம்

தெற்கு பசிபிக் கடலில் அமைந்துள்ள ஃபிஜி தீவு அருகே நேற்று காலை நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 6.2ஆக பதிவானது. இந்த நிலநடுக்கத்தைத் தொடர்ந்து மற்றொரு சிறிய அளவிலான நிலநடுக்கம் உணரப்பட்டது. அது ரிக்டர் அளவில் 5.2ஆக பதிவானது. இந்த இரு நிலநடுக்கங்கள் கடலில் 500 கிலோ மீட்டர் ஆழத்தில் மையம் கொண்டிருந்தன. 
ஆனால் இவற்றால் சுனாமி எச்சரிக்கை எதனையும் பசிபிக் சுனாமி எச்சரிக்கை மையம் வெளியிடவில்லை. நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பொருட்சேதம் பற்றிய விவரங்கள் எதுவும் வெளியிடப்படவில்லை. ஃபிஜி தீவு அமைந்திருக்கும் பகுதி நிலநடுக்கத்திற்கு இலக்காவது வழக்கம்.
 

இப்பகுதியில் மேலும் செய்திகள்

கிறைஸ்ட்சர்ச் நகரின் அல் நூர் பள்ளிவாசலின் முன்பு நடைபெற்ற மாபெரும் சிறப்புத் தொழுகையிலும் மௌன அஞ்சலி நிகழ்விலும் பிரதமர் ஜெசிண்டா ஆர்டன் முக்காடு அணிந்து பங்கேற்றார். படம்: ராய்ட்டர்ஸ்

23 Mar 2019

நாடளாவிய மௌன அஞ்சலி