பெட்டாலிங் ஜெயா: மலேசியாவின் கேமரன் மலை இடைத்தேர்தலில் அந்நாட்டின் முக்கிய எதிர்க்கட்சியான தேசிய முன்னணி கூட்டணிக்கு கிடைத்த மகத்தான வெற்றிக்கு, அம்னோ துணைத் தலைவர் முகம்மது காலித் நோர்டின் தமது பாராட்டுகளைத் தெரிவித்துக்கொண்டுள்ளார். இந்த வெற்றி மலாய் முஸ்லிம்களின் எழுச்சியைக் குறிப்பதாக அவர் சொன்னார். ஆளும் பக்கத்தான் ஹரப்பான் கூட்டணியைத் தோற்கடிக்கும் முயற்சியாக, இந்த இடைத்தேர்தலில் அம்னோவும் 'பாஸ்' கட்சியும் கைகோர்த்தன. இதன் காரணமாக, தேசிய முன்னணிக்கு ஆதரவு வழங்கும் விதமாக பாஸ் கட்சி இத்தேர்தலில் போட்டியிட வில்லை. "அம்னோவுக்கும் பாஸ் கட்சிக்கும் இடையிலான புரிந்துணர்வு மேம்பட்டால், பக்கத்தான் ஹரப்பானை அமைதிப்படுத்தக்கூடிய மிக முக்கிய மலாய் முஸ்லிம் அலை எழுச்சி காணும்," என்று திரு காலித் கூறினார்.2019-01-28 06:00:00 +0800
மலாய் முஸ்லிம்களின் எழுச்சியைக் காட்டுகிறது
1 mins read

