ஒட்டாவா: கனடியப் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, சீனாவுக்கான கனடிய தூதர் ஜான் மெக்கலமை பணிநீக்கம் செய்துள்ளார். கைதுசெய்யப்பட்ட 'ஹுவாவெய்' நிறு வனத்தின் உயர் அதி காரி மெங் வான் ஸே„வை கனடா அமெரிக்காவிடம் ஒப் படைப்பதன் தொடர் பில் திரு மெக்கலம் வெளியிட்ட சர்ச்சைக்குரிய கருத்துகளால் அவர் பணி நீக்கம் செய்யப்பட்டார். கனடிய தூதர் ஒருவர் பணிநீக்கம் செய்யப்படுவது இதுவே முதன்முறை என அரசதந்திரிகள் கூறியுள்ளனர். அமெரிக்காவின் வேண்டுகோளுக்கு இணங்க திருவாட்டி மெங்கை கனடா தடுத்து வைத்துள்ளது. அந்த நடவடிக்கை சீனாவுக்கு கடும் சினமூட்டி இருக் கிறது. அந்தச் சம்பவத்தால் கனடா வுக்கும் சீனாவுக்கும் இடையி லான உறவுகள் கசப்படைந்துள் ளன. ஈரான் மீது அமெரிக்கா விதித்துள்ள பல்வேறு தடைகளை மீறிய குற்றச்சாட்டுகளின் தொடர்பில் திருவாட்டி மெங் தடுத்துவைக்கப்பட்டுள்ளார்.
சீனாவுக்கான கனடா நாட்டின் தூதர் பணிநீக்கம்
1 mins read

