இந்தோனீசியாவில் 100க்கும் அதிகமானோர் டெங்கியால் மரணம்

இந்தோனீசியாவில் இம்மாதம் 100 பேருக்கும் அதிகமானோர் டெங்கியால் மாண்டுவிட்டதாக அந்நாட்டின் சுகாதார அமைச்சு தெரிவித்திருக்கிறது. 

கிழக்கு ஜாவா மாநிலத்தில் ஆக அதிகமாக 41 பேர் மாண்டதாகவும் வடக்கு சுலவேசியில் 13 பேர் மாண்டதாகவும் ஈஸ்ட் நுலா தெங்காராவில் பன்னிருவர் மாண்டதாகவும் அமைச்சு கூறியுள்ளது. தற்போது நிலவும் மழைக்காலத்தில் இந்தோனீசியாவிலுள்ள 372 நகரங்களில் குறைந்தது 9,634 டெங்கிச் சம்பவங்கள் பதிவாகியுள்ளன. 

“இதுபோன்ற மழைக்காலங்களில் கொசுக்கள் மேலும் சுலபமாக இனப்பெருக்கம் செய்கின்றன. ஒரு பெண் கொசு நூற்றுக்கணக்கான முட்டைகளை இடுகிறது. இந்த முட்டைகள் இரண்டு நாட்களில் கொசுக்களாக வளர்கின்றன,” என்று அவர் கூறினார். 

2017ஆம் ஆண்டில் இந்தோனீசியாவில் 68,407 டெங்கிச் சம்பவங்கள் பதிவாகின. அந்த ஆண்டுக்கான மரண எண்ணிக்கை 493 ஆக இருந்தது. இதற்கு முன்னர் 2016 ஆம் ஆண்டில் 204,171  டெங்கிச் சம்பவங்களும் 1,598 மரணங்களும் நிகழ்ந்தன.