‘ஸ்டார்பக்ஸ்’ முன்னைய தலைமை நிர்வாக அதிகாரிக்கு அதிபராக விருப்பம்

‘ஸ்டார்பக்ஸ்’ நிறுவனத்தின் முன்னைய தலைமை நிர்வாக அதிகாரி ஹவர்ட் ஷ்லட்ஸ், அமெரிக்காவின் அதிபர் வேட்பாளராக அடுத்த தேர்தலில் போட்டியிடப்போவதாக அறிவித்திருக்கிறார். ஜனநாயக் கட்சிக்கு நீண்ட காலமாக வாக்களித்து வந்தபோதும் தேர்தலில் சுயேட்சை வேட்பாளராகப் போட்டியிட  அவர் முடிவு செய்தார்.

அமெரிக்காவின் 50 மாநிலங்களிலும் போட்டியிடுவதற்கான ஆயத்தப் பணிகளைத் தொடங்கியிருப்பதாக அவர் கூறினார். அந்நாட்டில் முக்கிய கட்சிகளான குடியரசுக் கட்சியும் ஜனநாயகக் கட்சியும் தற்போது பொறுப்பில்லாமல் செயல்படுவதாகவும் தத்தம் அரசியல் கொள்கைகளில் தீவிரமாக இருப்பதாகவும் திரு ஷ்லட்ஸ் கூறினார்.