சீனாவின் பிரபல மனித உரிமை வழக்கறிஞருக்குச் சிறை

அரசாங்கத்திற்கு எதிராகச் செயல்பட்ட குற்றத்தின்பேரில் சீனாவின் பிரபல மனித உரிமை வழக்கறிஞர் வாங் குவான்ஸாங்கிற்கு நாலரை ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

போலிஸ் அதிகாரிகளால் சித்ரவதை செய்யப்பட்டவர்களுக்கும் அரசாங்கத்தால் துன்புறுத்தப்பட்டு வரும் ‘ஃபாலுங்கோங்’ ஆன்மீகக் குழுவின் உறுப்பினர்களுக்கும் நீதிமன்ற வழக்குகளில் வாங் வாதாடியிருக்கிறார்.

வாங் குற்றவாளி என்று சீனாவின் வடக்குப் பகுதியிலுள்ள டியென்ஜின் நீதிமன்றம் தனது இணையப்பக்கத்தில் இன்று வெளியிட்டது. வாங்கின் வழக்கு கையாளப்பட்ட விதம் குறித்து அக்கறை கொள்வதாக ஐக்கிய நாடுகள் அமைப்பு, கடந்த மாதம் 26 ஆம் தேதி தெரிவித்தது.