கிம் ஜோங் நாமின் கொலை வழக்கு மார்ச் மாதத்திற்கு ஒத்திவைப்பு

வட கொரியத் தலைவர் கிம் ஜோங் உன்னின் ஒன்றுவிட்ட சகோதரர் கிம் ஜோங் நாமைக் கொலை செய்ததாகக் குற்றஞ்சாட்டப்படும் இரண்டு பெண்களின் நீதிமன்ற விசாரணை மார்ச் மாதத்திற்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 

இந்தோனீசியாவைச் சேர்ந்த சிட்டி அய்ஷாவும் வியட்னாமைச் சேர்ந்த டோன் தி ஹுவோங்கும் ‘விஎக்ஸ்’ நச்சு ரசாயனத்தைப் பயன்படுத்தி அவரைக் கொன்றதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளனர்.