சிட்னி: வறட்சியால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள கிழக்கு ஆஸ்திரேலியாவில் ஆயிரக்கணக்கான மீன்கள் இறந்துவிட்டதாக அதிகாரிகள் தெரிவித்துஉள்ளனர். உயிரின வாழ்க்கைச் சூழலில் பெரிய பேரிடராக இது உருவெடுத்துள்ளதாக அஞ்சப்படுகிறது. மீன்கள் இறப்பதற்கு கடுமையான வறட்சியே காரணம் என்று மத்திய அரசு குறிப்பிட்டாலும், ஆறுகள் மாசுபட்டு இருப்பதே இந்த நிலைக்குக் காரணம் என்று உள்ளூர்வாசிகளும் நிபுணர்களும் கூறுகின்றனர். ஆஸ்திரேலியாவில் அண்மைக்காலமாக நீடித்து வந்த வெப்பமான வானிலையால் ஆறுகளில் பிராணவாயுவின் அளவு குறைந்தது. அதன் பின்னர் சில பகுதிகளில் வெப்பநிலை கணிசமாகக் குறைந்ததாலும் மழை பெய்யத் தொடங்கியதாலும் இந்த மீன்கள் இறந்திருக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆஸ்திரேலியாவில் மீன்கள் ஆயிரக்கணக்கில் இறந்தன
1 mins read

