பிலிப்பீன்ஸ் தேவாலயத் தாக்குதலுக்கு ஐஎஸ் பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்பு

மணிலா: பிலிப்பீன்சில் முஸ்லிம்கள் அதிகம் வசிக்கும் சூலு என்ற மாநிலத்தில் உள்ள ரோமன் கத்தோலிக்க தேவாலயம் ஒன்றில் நேற்று முன்தினம் வழிபாட்டு நேரத்தின்போது அரங்கேற்றப்பட்ட இரட்டை குண்டுவெடிப்புத் தாக்கு­தல்களுக்கு ஐஎஸ் பயங்கரவாத அமைப்பு பொறுப்பு ஏற்றுக்கொண்டு உள்ளது.
தாக்குதல் மேற்கொள்ளப்பட்ட ஒருசில மணி நேரம் கழித்து அந்த அமைப்பின் ‘அமாக்’ எனும் செய்தி நிறுவனம் அந்தத் தகவலை வெளியிட்டது.
அதன் பின்னர் ஐஎஸ் அமைப்பு அதன் சொந்த அறிக்கை ஒன்­றையும் வெளியிட்டது. 
தற்­கொலைப்படைத் தாக்குதல்­காரர்கள் இருவர் குண்டுகளை வெடிக்கச் செய்ததாக அதில் குறிப்பிடப்பட்டது.
தேவாலயத்தில் வழிபாட்டுக் கூட்டம் நடைபெற்றுக்கொண்டு இருந்த­போது முதல் குண்டு வெடித்தது. சம்பவ இடத்துக்குப் பாதுகாப்புப் படையினர் விரைந்த­போது இரண்டாவது குண்டு தேவா­லயத்திற்கு வெளியில் வெடித்­தது.
இந்த குண்டுவெடிப்புச் சம்ப­வங்களில் ராணுவ அதிகாரிகள் உட்பட 20க்கும் அதிகமானோர் மாண்டனர். 100க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
 

Loading...
Load next