இன்ஸ்டகிராம் சேவை ஒரு சிலருக்குச் செயலிழந்தது

ஃபேஸ்புக் நிறுவனத்திற்குச் சொந்தமான படப்பகிர்வு சமூக ஊடகமான இன்ஸ்டகிராம் இன்று காலை ஒரு சிலருக்கு வேலை செய்யவில்லை. 32,000 பேருக்கு மேல் இன்ஸ்டகிராம் இன்று காலை வேலை செய்யவில்லை என்று ‘டவுன்டிட்டெக்டர்.காம்’ தளம் தெரிவித்தது. பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலானோர் அமெரிக்காவைச் சேர்ந்தவர்கள் எனக் கூறப்படுகிறது.   இதனைச் சரிசெய்ய ஆயிரக்கணக்கான ஃபேஸ்புக் ஊழியர்கள் மும்முரமாக முயன்று வருவதாகக் கூறப்படுகிறது.

இன்ஸ்டகிராம் தளத்தை மெசென்ஜர், வாட்செப் ஆகிய தளங்களுடன் இணைக்க ஃபேஸ்புக் திட்டமிடுவதாகத் தகவல் வெளிவந்திருக்கும் வேளையில் இந்தச் சம்பவம் நிகழ்ந்துள்ளது. இது குறித்து ஃபேஸ்புக் இதுவரை எந்தக் கருத்தும் தெரிவிக்கவில்லை.