ஹூஸ்ட்டன் நகரில் சுடப்பட்ட நான்கு காவல்துறையினர்

அமெரிக்காவின் டெக்சஸ் மாநிலத்தில் போதைப்பொருள் கடத்தல் கும்பல் ஒன்றைச் சேர்ந்தவர்களைக் கைது செய்ய சென்ற போலிஸ் அதிகாரிகளில் நால்வர் சுடப்பட்டதாக   ஹூஸ்ட்டன் நகர போலிஸ் துறை தெரிவித்தது.

அமெரிக்க நேரப்படி மாலை சுமார் 5 மணிக்குச் சந்தேக நபர்கள் தங்களைக் கைது செய்ய வந்த போலிஸ் அதிகாரிகளை நோக்கி துப்பாக்கியால் சுட்டதைத் தொடர்ந்து இரு தரப்புக்கும் இடையே துப்பாக்கிச்சூடு நிகழ்ந்ததாக அந்நாட்டு ஊடகங்கள் கூறுகின்றன. இந்த மோதலில் இரண்டு சந்தேக நபர்கள் உயிரிழந்தனர்.

நான்கு போலிஸ் அதிகாரிகளில் இருவர் கழுத்தில் சுடப்பட்டதாகவும் அவர்களுக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டதாகவும்  ஹூஸ்ட்டன் நகர போலிஸ் துறை தெரிவித்தது. அவர்களது காயங்கள் கடுமையாக இருந்தபோதும் மருத்துவமனையில் குணமடைந்து வருவதாகக் கூறப்படுகிறது.

Loading...
Load next