ஹுவாவெய் மீது குற்றச்சாட்டு;  சீனா எச்சரிக்கை

பெய்ஜிங்: சீனாவின் தகவல் தொடர்பு நிறுவனமான ஹுவாவெய் மீதும் அதன் தலைமை நிதி அதிகாரி மெங் வான்சோ மீதும் அமெரிக்கா குற்றச்சாட்டுகளைப் பதிவு செய்துள்ளது. ஈரான் மீது அமெரிக்கா விதித்திருந்த தடையைத் திருவாட்டி மெங் மீறியிருந்ததாக குற்றம் சுமத்தப்பட்டது.
இதற்கு சீனா கடுமையாக எதிர்ப்பு தெரிவித்துள்ளது.  

குற்றச்சாட்டுகள் பதிவாகி சில மணி நேரங்களில் சீனா அறிக்கை வெளியிட்டது. சீன நிறுவனங்களை அநியாய மான முறையில் அடக்க  வேண் டாம் என்று அமெரிக்காவிடம் சீன வெளியுறவு அமைச்சு கூறியது.சீன நிறுவனங்களின் உரிமைகளையும் இலட்சியங்களையும் சீனா மிகுந்த முனைப்புடன் தற்காக்கும் என்று அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது.

திருவாட்டி மெங்கிற்கு எதிரான கைது ஆணையை அமெரிக்கா ரத்து செய்ய வேண்டும் என்று சீனா வலியுறுத்தியது. திருவாட்டி மெங் தற்போது கனடாவின் வான்கூவர் நகரில் இருக்கிறார்.  அமெரிக்காவின் கோரிக் கைக்கு இணங்க திருவாட்டி மெங்கை கனடா கைது செய்தது.
பிறகு அவர்  பிணையில் விடுவிக்கப்பட்டார். ஹுவாவெய் மீதும் திருவாட்டி மெங் மீதும் அமெரிக்கா எடுத்துள்ள நடவடிக்கைகள் நியாயமற்றவை என்று சீனாவின் தொழில், தகவல் தொழில்நுட்ப அமைச்சு சாடியுள்ளது.

இந்த நடவடிக்கைகள் சீனாவின் 5ஜி மேம்பாட்டைப் பாதிக்காது என்று அது கூறியது.
அமெரிக்காவின் குற்றச்சாட்டுகளை ஹுவாவெய் நிறுவனம் மறுத்துள்ளது.
 

Loading...
Load next