தாய்லாந்து தேர்தல் இணையப்பக்கம் செயலிழந்தது

பேங்காக்: தாய்லாந்து தேர்தலுக்கான இணையப்பக்கம் நேற்று முன்தினம் காலை செயலிழந்தது.
தாய்லாந்தின் அடுத்த தேர்தல் மார்ச் மாதம் 24ஆம் தேதியன்று நடைபெற இருக்கிறது. 
இது கடந்த ஏழு ஆண்டுகளில் தாய்லாந்தில் நடைபெற இருக்கும் முதல் தேர்தல்.
மார்ச் மாதம் 4ஆம் தேதியிலிருந்து 17ஆம் தேதி வரை வாக்காளர்கள் முன்கூட்டியே வாக்களிக்கலாம்.
முன்கூட்டியே வாக்களிப்பதற் காகப் பதிவு செய்துகொள்ள பலர் அந்த இணையப்பக்கத் துக்குச் சென்றதால் இணையப் பக்கம் செயலிழந்ததாக தாய் லாந்து தேர்தல் அதிகாரிகள் தெரிவித்தனர்.
தேர்தலுக்காகப் பொதுமக்கள் மிகுந்த ஆவலுடன் காத்துக் கொண்டிருப்பதை இது காட்டுவதாக நம்பப்படுகிறது.

இப்பகுதியில் மேலும் செய்திகள்