டிரம்ப்பை எதிர்க்க கமலா தயார்

வா‌ஷிங்டன்: அமெரிக்காவின் அடுத்த அதிபர் தேர்தலில் அதிபர் டிரம்ப்பை எதிர்த்துப் போட்டியிட ஜனநாயகக் கட்சியின் கமலா ஹாரிஸ் விழைகிறார்.
அதற்கான முயற்சியில் அவர் தீவிரமாக இறங்கியுள்ளார். 
தம்மை அதிபர் தேர்தல் வேட்பாளராக அவர் வாக்காளர்களிடம்  நேற்று முன்தினம் அறிமுகம் செய்துகொண்டார்.
அமெரிக்க அதிபர் தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற இருக்கிறது.
தேர்தலுக்கு இன்னும் ஓராண்டு இருக்கையில், கலிஃபோர்னியாவைச் சேர்ந்த செனட்டரான திருவாட்டி கமலா  தேர்தலுக்கு இப்பொழுதே  தயாராகிவிட்டார்.
அதிபர் டிரம்ப்பை எதிர்க்க மேலும் பலர் களமிறங்கக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், அயோவா மாநிலத்தில் தமது பிரசாரத்தைத் திருவாட்டி கமலா தொடங்கி உள்ளார்.
வேட்பாளர்களை முன்மொழியும் செயல்முறை அயோவா மாநிலத்தில் தொடங்கும்.
“இன்னும் நிறைய வேலை இருக்கிறது,” என்று டிரேக் பல்கலைக்கழகத்தில் நடை பெற்ற தமது பிரசாரக் கூட்டத்தில் திருவாட்டி கமலா கூறினார்.
சுகாதாரப் பராமரிப்பு, குற்றங்கள், துப்பாக்கி தொடர்பான சட்டங்கள், ஆப்கானிஸ்தான் போர் போன்ற விவகாரங் கள் பற்றி திருவாட்டி கமலா பேசினார்.