கிழக்குக் கடற்கரை ரயில் திட்டம் தொடர்ந்தால் மலேசியா ஏழ்மையில் வாடும்

புத்ராஜெயா: பல பில்லியன் டாலர் மதிக்கத்தக்க கிழக்குக் கடற்கரை ரயில் இணைப்புத் திட்டம் தொடர்ந்தால் மலேசியா ஏழ்மையில் வாட நேரிடும் என்று மலேசியப் பிரதமர் மகாதீர் முகம்மது எச்சரிக்கை விடுத்துள்ளார்.
சீனாவுடன் செய்யப்பட்ட இந்த 81 பில்லியன் ரிங்கிட் திட்டம் ரத்து செய்யப்பட்டதா என்பது குறித்து டாக்டர் மகாதீர் முகம்மது உறுதிப்படுத்தவில்லை.
ஆனால் திட்டத்தை ரத்து செய்வதற்காகக் கொடுக்க வேண்டிய இழப்பீட்டுத் தொகை திட்டத்துக்கான செலவினத்தைவிட குறைவு என்று அவர் கூறினார்.
"தற்போது எங்களுக்கு அதிகக் கடன் சுமை உள்ளது. அனைத்துக் கட்சிகளும் இது குறித்து புரிந்துகொள்ள வேண்டும். இந்தத் திட்டம் தொடர்ந்தால் மலேசியா ஏழ்மையில் வாடும்," என்று டாக்டர் மகாதீர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
திட்டத்தின் நிலை குறித்து நிதி அமைச்சு கூடிய விரைவில் அதிகாரபூர்வ அறிவிப்பு ஒன்றை வெளியிடும் என்று டாக்டர் மகாதீர் கூறினார்.
சீன அரசுக்குச் சொந்தமான நிறுவனத்துடன் செய்யப்பட்ட ஒப்பந்தத்தை மலேசியா ரத்து செய்துவிட்டதாக ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் நாளிதழ் கடந்த வாரம் குறிப்பிட்டது.
திட்டத்துக்கான செலவினத்தைப் பாதியாகக் குறைக்க மலேசிய அரசாங்கம் முயன்று வருவதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. அந்த 688 கிலோ மீட்டர் தூர ரயில் பாதை மலேசியாவின் மேற்குக் கரையைக் கிழக்குக் கரையுடன் இணைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஆனால் பக்கத்தான் ஹரப்பான் கூட்டணி அரசாங்கம் அமைத்த பிறகு கடந்த ஆண்டு ஜூலை மாதத்திலிருந்து ரயில் இணைப்புக்கான கட்டுமானப் பணிகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!