தனிமையில் இருந்த வாத்து மரணம்

நியுவே என்ற பசிபிக் தீவில் தனியாக வசித்திருந்த வாத்து இறந்தது குறித்து பலர் தங்களது இரங்கலை வெளிப்படுத்தினர். ‘ட்ரெவர்’ என்ற இந்த வாத்தைப் பற்றி நியூசிலாந்தைச் சேர்ந்த செய்தியாளர் ஒருவர் எழுதிய கட்டுரை கடந்தாண்டு வெளிவந்ததைத் தொடர்ந்து வாத்து பிரபலமானது.

ஆயினும் ட்ரெவர் கடந்த வாரம் நாய்களால் தாக்கப்பட்டு இறந்ததாக அந்த வாத்துக்கென்றே அமைக்கப்பட்ட ஃபேஸ்புக் பக்கம் ஒன்று தெரிவித்தது. நியுவே மக்களுக்கு இது துயரமான நேரம் என்று அந்நாட்டின் வர்த்தகச் சம்மேளன தலைமை நிர்வாகி ரேய் ஃபின்ட்லே தெரிவித்தார். ஒவ்வோர் ஆண்டும் கிட்டத்தட்ட 9,000 சுற்றுப்பயணிகள் ட்ரெவரைக் காணச் சென்றதாகத் திரு ஃபின்ட்லே தெரிவித்தார்.

பலரின் மனதில் நீங்கா இடத்தைப் பிடித்துள்ள இந்த வாத்துக்காக மனிதர்கள் மட்டுமன்றி சுற்றியுள்ள விலங்குகளும் பறவைகளும் வருந்துவதாக நினைப்பதாய் அவர் கூறினார்.நியூசிலாந்தின் வடமேற்குப் பகுதியிலிருந்து 2,400 கிலோமீட்டர் தூரத்தில் நியூவே உள்ளது. தனி நாடாக இருக்கும் நியூவே தீவில் 1,600 பேர் மட்டுமே வசிக்கின்றனர்.

இப்பகுதியில் மேலும் செய்திகள்

விமானத்தின் கூரைக்குத் தூக்கி எறியப்பட்டார்  அந்த விமானத்தின் சிப்பந்தி. படம்: காணொளி ஸ்கிரீன்கிராப்

19 Jun 2019

மோசமான வானிலை காரணமாக ஆட்டம் கண்ட விமானம்: விமானத்தின் கூரைக்கு வீசப்பட்ட சிப்பந்தி

அடுத்த வாரம் ஜப்பானில் நடக்கவுள்ள உச்சநிலை மாநாட்டில் அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப்பும் சீன அதிபர் சீ ஜின்பிங்கும் சந்திக்கவுள்ளனர்.
படம்: ராய்ட்டர்ஸ்

19 Jun 2019

ஜி20 மாநாட்டில் சீன அதிபரைச் சந்திக்க இருப்பதாகக் கூறியுள்ள டிரம்ப்

அடுத்த வாரம் ஜி-20 நாடுகளின் உச்சநிலை மாநாடு ஜப்பானின் ஒசாகா நகரில் நடக்கவுள்ளது. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

19 Jun 2019

ஜி-20 உச்சநிலை மாநாட்டில் வர்த்தகமும் உலக வர்த்தக நிறுவனத்தின் சீரமைப்பும் விவாதிக்கப்படும்: ஜப்பான்