பிலிப்பீன்ஸ் கையெறி குண்டு தாக்குதலில் இருவர் பலி

பிலிப்பீன்ஸிலுள்ள ஸம்பொவாங்கா நகரில் பள்ளிவாசல் ஒன்றுக்குள் வீசப்பட்ட கையெறி குண்டு தாக்குதலில் இருவர் கொல்லப்பட்டதுடன் குறைந்தது நால்வர் காயமடைந்தனர். ஜோலோ தீவில் கடந்த ஞாயிறன்று தேவாலயத்தில் நடந்த இரண்டு வெடிப்புச் சம்பவங்களுக்குப் பிறகு இந்தச் சம்பவம் நிகழ்ந்துள்ளது.

அடையாளம் உறுதிசெய்யப்படாத நபர் ஒருவர், பள்ளிவாசலுக்குப் பக்கத்திலுள்ள வீதி விளக்கை அடைத்து, கையெறி குண்டு ஒன்றைப் பள்ளிவாசலுக்குள் வீசினார். 

இதற்கிடையே, ஜோலோவில் தேவாலயத் தாக்குதலை நடத்தியதாகச் சந்தேகிக்கப்படும் மூவரில் ஒருவரை போலிஸ் அதிகாரிகள் சுட்டுக்கொன்றதாக அந்நாட்டு போலிஸ் துறை தெரிவித்தது. அந்தச் சந்தேக நபர் 64 வயது ஒம்மல் இயூசுஃப் என்று அடையாளம் காட்டப்பட்டுள்ளது. மற்ற இருவர் அதிகாரிகளிடமிருந்து தப்பியோடியதாகக் கூறப்படுகிறது.