புதிய முதலீட்டு சட்டத்தை அமலாக்க சீனா தீவிரம்

பெய்ஜிங்: தொழில்நுட்ப உரிமை யைக் கட்டாயமாக மாற்றுவது, வெளிநாட்டு வர்த்தக நடைமுறை களில் அரசாங்கத்தின் சட்ட விரோதத் தலையீடு ஆகியவற்றை தடை செய்யும் புதிய வெளிநாட்டு முதலீட்டு சட்டத்தை வரும் மார்ச் மாதத்தில் நாடாளுமன்றத்தில் நிறைவேற்ற சீனா அரசாங்கம் உறுதி பூண்டுள்ளது.
சீனாவின் அதிகாரபூர்வ ஊடகமான ஸின்ஹுவா செய்தி நிறுவனம் இதனை தெரிவித்தது.
சீன அரசு வகுத்துள்ள நிகழ்ச்சி நிரலின்படி முதலீட்டு சட்டம் நாடாளுமன்றத்தில் விரை வில் நிறைவேற்றப்படவிருக்கிறது. 
இரு தரப்பு வர்த்தகப் போரைத் தணிக்க இரு நாடுகளும் பேச்சு நடத்தி வரும் நிலையில் வா‌ஷிங் டனின் தேவையை இதன் மூலம் பூர்த்தி செய்ய சீனா முயற்சி செய் கிறது.
ஏற்கெனவே அமெரிக்காவின் அறிவுசார் சொத்துகளைத் திருடு வதாகவும் அறிவுசார் சொத்து உரிமையைக் கட்டாயமாக மாற்று வதாகவும் பெய்ஜிங் மீது அமெரிக்கா குற்றம்சாட்டியுள்  ளது. இதனைத் தடுப்பதற்கான  நடவடிக்கைகளை எடுக்கவில்லை யென்றால் சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட் களுக்கு வரி விதிக்கப்படும் என்று அமெ ரிக்கா எச்சரித் துள்ளது.
ஆனால் அமெரிக்காவின் குற்றச்சாட்டுகளை சீனா தொடர்ந்து மறுத்துவருகிறது.

இப்பகுதியில் மேலும் செய்திகள்

இடிபாடுகளுக்கு அடியில் சிக்கித் தவித்த ஒருவரை உயிருடன் மீட்கும் மீட்புப் பணியாளர்கள். படம்: ஏஎஃப்பி

25 Jun 2019

கம்போடியாவில் இடிந்து விழுந்த கட்டடம்: இருவர் உயிருடன் மீட்பு

பாலம் உடைந்ததால் கவிழ்ந்த ரயில் பெட்டிகள். படம்: ராய்ட்டர்ஸ்

25 Jun 2019

பங்ளாதே‌ஷில் கால்வாய்க்குள் கவிழ்ந்த ரயில்