ரகசிய சட்டத்தை மீறியதாக ஹுவாவெய் மீது வழக்கு

புரூக்ளின்: சீனாவின் ஆகப்பெரிய தொழில்நுட்ப நிறுவனமான ஹுவாவெய்யும் அதன் அங்கீகாரம் பெற்ற அமெரிக்க நிறுவனங்களும் வரும் பிப்ரவரி 28ஆம் தேதி சியாட்டல் நீதிமன்றத்தில் முன் னிலையாக வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.
அப்போது ஹுவாவெய், அங்கீகாரம் பெற்ற நிறுவனங்கள் மீது அமெரிக்காவின் டி-மொபைல் நிறுவனத்தின் வர்த்தக ரகசியங் களைத் திருடிய முயற்சியில் ஈடுபட்டதாகக்  குற்றம்சாட்டப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஹுவாவெய் மீதான குற்றச் சாட்டு விவரங்களை வா‌ஷிங்டன், நியூயார்க்கில் உள்ள அமெரிக்க வழக்கறிஞர்கள் நேற்று வெளியிட் டனர். சியாட்டல் நீதிமன்ற வழக்கு விசாரணையில் பத்து குற்றச் சாட்டுகளை ஹுவாவெய் நிறு வனம் எதிர்நோக்குகிறது.
இதில் டி-மொபைல் உரு வாக்கிய ‘டேப்பி’ எனும் கைத் தொலைபேசியைச் சோதனையிடும் இயந்திரத்தைத் திருடுவதற்காக ஹுவாவெய் முழு வீச்சில் செயல் பட்டதாகக் கூறப்படுகிறது.
இந்த வழக்கு அமெரிக்க மாவட்ட நீதிபதி ரிக்கார்டோ மார் டினெஸ் முன்னிலையில் விசார ணைக்கு வருகிறது.
ஹுவாவெய் மற்றும் சீன தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு எதிராக  அமெரிக்கா பரந்த அள வில் நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
இருப்பினும் அமெரிக்காவின் அண்மைய நடவடிக்கை உலகின் இரு பெரும் பொருளியல் நாடு களான அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையிலான பதற்றத்தை மேலும் அதிகரிக்கச் செய்யும் என்று   சொல்லப்படுகிறது.
புரூக்ளின் நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்ட வழக்கில் ஹுவா வெய்யும் அதன் அங்கீகாரம் பெற்ற அமெரிக்க நிறுவனங்களும் ஹுவாவெய் தலைமை நிதி அதி காரியான மெங் வன்ஷோவ்வும் ஈரானுடனான வர்த்தகம் தொடர் பில் வங்கி, பணப் பரிவர்த்தனை மோசடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டு களை எதிர்நோக்குகின்றன.
கடந்த டிசம்பர் 1ஆம் தேதி அமெரிக்காவின் வேண்டு கோளுக்கு இணங்க கனடாவில் மெங் கைது செய்யப்பட்டார்.
இவரை அமெரிக்காவுக்கு நாடு கடத்த வேண்டும் என்று அமெ ரிக்கா கோரிக்கை விடுத்துள்ளது.