இந்தோனீசியா: நைக்கி காலணியின் வடிவம் குறித்து கொந்தளிப்பு

இஸ்லாமியக் கடவுளின் பெயரைக் குறிக்கும் அரேபிய எழுத்து போன்ற ஒரு வடிவம் வரையப்பட்டுள்ள ‘நைக்கி’ நிறுவனக் காலணி குறித்து இந்தோனீசிய முஸ்லிம்கள் தங்கள் கண்டனங்களை வெளிப்படுத்தியுள்ளனர். ‘நைக்கி’ நிறுவனம் இஸ்லாமை நிந்தித்ததாகவும் அந்தக் காலணிகள் உடனே மீட்டுக்கொள்ளப்படவேண்டும் என்றும் அந்நாட்டின் முஸ்லிம்கள் சிலர் கோரி வருகின்றனர்.

சைகா நுரின் என்ற முஸ்லிம் பெண், ‘நைக்கி’ கடை ஒன்றுக்குள் சென்றபோது ‘நைக்கி ஏர் மேக்ஸ்’ என்ற அந்தக் காலணியைப் பார்த்ததைத் தொடர்ந்து அது உலகச் சந்தையிலிருந்து மீட்டுக்கொள்ளப்படவேண்டும் எனக் கோரும் இணைய மனு ஒன்றைத் தொடங்கினார். இந்த மனு 16,000க்கும் மேற்பட்ட கையெழுத்துகளை ஈர்த்தது. மேலும் சிலர், டுவிட்டரில் நைக்கிக்கு எதிரான கண்டனங்களைப் பதிவு செய்தனர்.

முஸ்லிம் சமூகத்தினரை வேண்டுமென்றே புண்படுத்தவில்லை என்று ‘நைக்கி’ நிறுவனம் கூறுகிறது. காலணிகளில் வரையப்பட்ட வடிவத்திற்கும் எந்தச் சமயத்திற்கும் தொடர்பு இல்லை என்று அந்த நிறுவனத்தின் பேச்சாளர் கூறினார்

இப்பகுதியில் மேலும் செய்திகள்

மலேசிய முன்னாள் பேரரசர் சுல்தான் முகம்மது, ரஷ்யாவைச் சேர்ந்த ரிஹானா ஒக்சானா தம்பதியின் திருமண வாழ்க்கை ஓராண்டு காலம் மட்டுமே நீடித்தது. படம்: ரிஹானா/இன்ஸ்டகிராம்

21 Jul 2019

மலேசிய முன்னாள் பேரரசர், ரஷ்ய முன்னாள் அழகி தம்பதியின் விவாகரத்தை உறுதிசெய்த சிங்கப்பூர் வழக்கறிஞர்