அமெரிக்காவில் கடுமையான குளிர் - அதிகரிக்கும் மரண எண்ணிக்கை

அமெரிக்காவின் மத்திய மேற்குப் பகுதியில் தற்போது வீசுகிற  மிகக் குளிரான வட துருவக் காற்றால் அங்குள்ள வெப்பநிலை அபாயகரமான அளவுக்குக் குறைந்துள்ளது. இதனால் மேலும் மூவர் மாண்டதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

வெப்பநிலை சில இடங்களில் உறைநிலைக்குக்கீழ் -35 டிகிரி செல்சியஸ் வரை குறைந்திருப்பதாகவும் வேறு சில இடங்களில் -41 டிகிரி செல்சியஸ் வரை குறைந்திருப்பதாகவும் தகவல்கள் கூறுகின்றன.

மிச்சிகன், அயோவா, இண்டியானா, இலினோய், விஸ்கான்சின், மின்னெசொட்டா ஆகிய மாநிலங்களில் கடுங்குளிரால் இதுவரை எட்டு பேர் மாண்டடுவிட்டனர்.