கோலாலம்பூர்: மலேசியாவின் புதிய மாமன்னராக பாகாங் சுல்தான் அப்துல்லா ரியாதுடின் நேற்று பதவியேற்றுக் கொண்டார். கோலாலம்பூரில் உள்ள தேசிய அரண்மனையில் பாரம்பரிய சடங்குகளுடன் நீல நிற உடை அணிந்திருந்த விளையாட்டுகளில் பேரார்வமிக்க சுல்தான் அப்துல்லா மாமன்னராக முடி சூட்டப்பட் டார். நாடு முழுவதும் தொலைக் காட்சியில் ஒளிபரப்பப்பட்ட இந்த முக்கிய நிகழ்வில் பிரதமர் மகாதீர் முகம்மது உட்பட அரசியல் பிர முகர்களும் முக்கிய விருந்தினர் களும் பங்கேற்றனர். அரண்மனையில் பதவி பிர மாணம் எடுத்துக் கொள்வதற்கு முன்பு 59 வயது சுல்தான் அப் துல்லா, மரியாதை அணிவகுப்புடன் வரவேற்கப்பட்டார். இதே நிகழ்ச்சியில் பேராக் சுல்தான் நஸ்ரின் ஷாவும் துணை மன்னராக உறுதிமொழி எடுத்துக் கொண்டார். கடந்த 2016 டிசம்பர் 13ஆம் தேதி நாட்டின் 15வது மாமன்ன ராகப் பதவி ஏற்றுக்கொண்ட கிளந்தான் சுல்தான் ஐந்தாம் முகம்மது திடீரென பதவி விலகிய தால் பாகாங் சுல்தான் அப்துல்லா புதிய மாமன்னராக தேர்ந் தெடுக்கப்பட்டார். கிளந்தான் சுல்தான் ஐந்தாம் முகம்மதுவின் பதவிக் காலம் 2021 ஆம் ஆண்டு வரை இருந் தது. இருப்பினும் அவர் இடையி லேயே பதவி விலகினார். மலேசியாவில் மாமன்னர் ஒருவர் தமது பதவிக் காலத்தில் பதவி விலகியது மலேசிய வர லாற்றில் இதுவே முதல் முறை.
மலேசியாவின் மாமன்னராக பாகாங் சுல்தான் பதவியேற்பு
1 mins read
-

