பனியில் உறையும் அமெரிக்க மாநிலங்கள்; எட்டுப் பேர் பலி

வா‌ஷிங்டன்: அமெரிக்காவின் மத்திய மேற்கு வட்டார மாநிலங் களில் நிலவும் கடுமையான பனி யால் அம்மாநிலத்தின் நகரங்கள் உறைந்துகிடக்கின்றன.
பெரும்பாலான மாநிலங்களில் வடதுருவ பருவநிலையைவிட மோசமான பனிப்பொழிவு காணப் படுகிறது. இதுவரை எட்டுப் பேர் பனியில் மாண்டுவிட்டனர்.
‘போலார் வொர்டெக்ஸ்’ எனும் உறைபனியால் பல மாநிலங்களில் மக்கள் தலை காட்ட முடியவில்லை.  
சிகாகோ மாநிலத்தில் மட்டும் பருவநிலை பூஜ்யத்துக்கும் கீழ் 30 சென்டிகிரேடுக்குச் சரிந்தது.
இது, ஆகக்குளிர்பிரதேசமான வடதுருவ உறைபனியைவிட அதிகமாகும். 
நார்த் டகோடாவில் பருவநிலை பூஜ்யத்துக்கும் கீழ் 37 சென்டி கிரேடுக்குக் குறைந்தது.
சுமார் 250 மில்லியனுக்கும் மேற்பட்ட அமெரிக்கர்கள் உறை பனியால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும் 90 மில்லியன் பேர் பூஜ் யத்துக்கும் கீழ் 17 சென்டிகிரேட் அல்லது அதற்கும் கீழ் உறை பனியை எதிர்நோக்க வேண்டி யிருக்கும் என்று தெரிவிக்கப் பட்டுள்ளது. புதன்கிழமை முதல் மேற்கு மாநிலங்களில் தொடர்ந்து பனிப்பொழிவு இருப்பதால் நகரங்கள் பனியால் மூடப்பட்டுள் ளன. இந்த நிலையில் விஸ்கான் சின் மாநிலத்தில் 24 அங்குலமும் இல் லினாய்சில் ஆறு அங்குலமும் பனிப்பொழிவு இருக்கும் என்று வானிலை எச்சரித்துள்ளது.
விஸ்கான்சின், மிச்சிகன், இல்லினாய்ஸ் உள்ளிட்ட மாநிலங் களில் அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது.
இல்லினாய்சில் உள்ள தேசிய வானிலை நிலையத்தின் ரிக்கி காஸ்ட்ரோ, தற்போது ஏற்பட்டுள்ள மோசமான உறைபனி அமெரிக்க வரலாற்றிலேயே முதல் முறையாக இருக்கும் என்று மதிப்பிட்டுள் ளார்.