சிட்னியை வாட்டும் வெயில்; மின்சாரமும் இல்லை

சிட்னி: ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரை வெயில் வாட்டி வதைக்கும் வேளையில் 45,000 வீடு களுக்கு மேல் மின்சாரம் இல்லாத தால் மக்கள் பெரும் அவதிக்கு உள்ளாயினர்.
சிலர் மின் தூக்கிகளில் சிக்கிக்கொண்டதாகவும் மருத்துவ மனை ஒன்றில் மின்சாரம்  துண் டிக்கப்பட்டதாகவும் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
சிட்னி நகரின் வெப்ப நிலை 40 டிகிரி சென்டிகிரேடை எட்டியுள் ளது. கடந்த வாரம் முழுவதும் பொதுமக்கள் வெயிலில் வாடி வந்தனர்.
இந்நிலையில் சிட்னி புறநகர் பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப் பட்டுள்ளது. மின் துண்டிப்புக்கான காரணம் தெளிவாகத் தெரிய வில்லை. சிட்னியின் போன்டி கடற்கரை முதல் டவுள் பே வரை வீடு, அலுவலகங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது.