சீனப் புத்தாண்டுக்காகப் பயணங்களை அதிகரிக்கும் ஏர்ஏஷியா

ஏர்ஏ‌ஷியா உள்ளிட்ட மூன்று மலேசிய விமான நிறுவனங்கள், ஜனவரி 30க்கும் பிப்ரவரி 12க்கும் இடையில் தங்களது மலிவுக் கட்டணப் பயணங்களை அதிகரித்துள்ளதாக அந்நாட்டின் போக்குவரத்து அமைச்சர் அந்தொனி லோக் சியூ ஃபூக் தெரிவித்தார்.

குறிப்பிட்ட 14 பயணப் பாதைகளில் பயணிகளுக்கான விமான இடங்களை ஏர்ஏ‌ஷியா, மலேசிய ஏர்லைன்ஸ், மலிண்டோ ஏர் ஆகிய நிறுவனங்கள் அதிகரித்திருப்பதாகத் திரு சியூ கூறினார். இதற்கான கட்டணங்கள் கடந்தாண்டைக் காட்டிலும் 25 விழுக்காடு குறைவாக இருப்பதாகவும் லோக் கூறினார். 

இதற்கிடையே அமெரிக்காவுடனான வர்த்தக உறவில் நிலவும் பதற்றநிலையாலும் மெதுவடைந்துவரும் உள்நாட்டுப் பொருளியலாலும் சீனாவைச் சேர்ந்த சுற்றுப்பயணிகள் பலர் தொலைதூர நாடுகளுக்குச் செல்லாமல் ஆசிய நாடுகளுக்கு அதிகம் செல்லலாம் என்று சீனப் பயண நிறுவனம் ‘சிடிரிப்’ தெரிவித்துள்ளது. கிட்டத்தட்ட ஏழு மில்லியன் சீனர்கள் வெளியூருக்குப் பயணம் செய்வர் என எதிர்பார்க்கப்படுகிறது.

Loading...
Load next