ஹாங்காங்கில் 1,000க்கும் அதிகமான யானைத் தந்தங்கள் பறிமுதல்

யானைத் தந்தங்கள் மற்றும் அருகிவரும் விலங்கு பாகங்களால் செய்யப்பட்டுள்ள பல்வேறு பொருட்களை ஹாங்காங்கின் சுங்கத்துறை பறிமுதல் செய்தது. சட்டவிரோத விலங்குப் பொருள் கடத்தலை முறியடிக்க அதிகாரிகளின் முயற்சிகள் அதிகரித்துள்ள வேளையில் ஆப்பிரிக்காவிலிருந்து கடத்தப்பட்டுள்ள இப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

இந்தப் பொருட்களின் மொத்த மதிப்பு 62 மில்லியன் ஹாங்காங் டாலருக்கும் ( 10.7 மில்லியன் வெள்ளி) அதிகம். நைஜீரியாவிலிருந்து இவை வியட்னாமுக்கு அனுப்பப்படவேண்டியிருந்ததாக அவர்கள் கூறினர். மற்றொரு சம்பவத்தில், வியட்னாமின் வடக்குப் பகுதியிலுள்ள ஹை போங் துறைமுகத்தில் சுங்கத்துறை அதிகாரிகள், மேலும் 1.4 டன் பங்கோலின் தோலைக் கண்டுபிடித்ததாக வியட்னாமிய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

இப்பகுதியில் மேலும் செய்திகள்

திரு அன்வார் இப்ராஹிம்மின் அரசியல் செயலாளர் திரு ஃபர்ஹஷ் முபாரக், படம்: த ஸ்டார்.

20 Jun 2019

“நான் அவன் இல்லை”: சர்ச்சை காணொளி குறித்து இளம் அரசியல்வாதி

அதிபர் தேர்தலில் போட்டியிடுவதற்காக தேர்தல் பிரசாரத்தை அதிகாரபூர்வமாகத் தொடங்கியுள்ள திரு டிரம்ப், “அமெரிக்காவை மீண்டும் சிறந்த இடத்துக்கு உயர்த்துவேன்,” என்று சூளுரைத்துள்ளார். படம்: ராய்ட்டர்ஸ்

20 Jun 2019

தேர்தல் பிரசாரத்தைத் தொடங்கினார் அதிபர் டிரம்ப்