சீன உணவகத்தில் பெருச்சாளி

ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரிலுள்ள சீன உணவகம் ஒன்றுக்குள் ஒரு பெருச்சாளி அங்குமிங்கும் ஓடிக்கொண்டிருந்ததைக் காட்டும் காணொளி ஒன்று சமூக ஊடகங்களில் வலம் வருகிறது.

டிங் டாய் ஃபுங் உணவகத்தில் பதிவு செய்யப்பட்ட இந்தக் காணொளி வெளிவந்ததைத் தொடர்ந்து அதிகாரிகள் அங்கு சோதனை நடத்தியுள்ளனர்.

உணவகத்தை அதன் உரிமையாளர்கள் தாங்களாகவே மூடியதாக அங்கு சோதனை நடத்திய அதிகாரிகள் தெரிவித்தனர். மற்றொரு சோதனை முடியும் வரை அந்த உணவகம் செயல்பட அனுமதிக்கப்படாது என்றனர் அதிகாரிகள்.