மலேசிய உணவகங்களில் புகைபிடிக்கத் தடை: சாபா மாநிலத்துக்கும் நீட்டிப்பு 

சாபா: உணவகங்களில் புகைபிடிப்பதற்கு எதிராக மலேசியா அண்மையில் அறிவித்துள்ள தடை சாபாவிலும் நடப்புக்கு வருகிறது. இந்தத் தடை மலேசிய தீபகற்பத்தில் கடந்த மாதம் 1ஆம் தேதி அறிவிக்கப்பட்டிருந்தது. 
இந்த மாற்றத்திற்கு சாபாவின் மக்கள் தயாராக இருப்பதாக அந்த மாநிலத்தின் சுகாதார, மக்கள் நலன் துணையமைச்சர் நுராஸ்லினா அரிஃப் தெரிவித்ததாக ‘த மலாய் மெயில்’ செய்தி இணையத்தளம் குறிப்பிட்டுள்ளது. இந்தத் தடையால் புகைபிடிப்பவர்களின் எண்ணிக்கை குறையும் என்பதும் இவரின் நம்பிக்கை.

இப்பகுதியில் மேலும் செய்திகள்