நீரின் மேற்பரப்பில் தலை காட்டி வரும் ஆழ்கடல் மீன்வகை

தோக்கியோ: ஆழ்கடலில் மட்டுமே வசித்து வந்த விசித் திரமான மீன்வகை ஒன்று சமீப காலமாக ‘தோயாமா பே’ நீர் நிலைகளின் மேற்பரப்புக்கு வந்து காட்சியளிக்கிறது.
நீளமான வெள்ளிநிற மேனி யும் சிவப்பு வண்ண துடுப்பு களும் கொண்ட இந்த ஆழ்கடல் மீன்வகை 2009ஆம் ஆண்டு முதல் தொடர்ந்து வலையில் சிக்கிக்கொண்டு வருவதால் கடல்சார் நிபுணர்கள் வியக் கின்றனர்.
இவ்வாண்டு ஜனவரி மாதத் தில் மட்டும் இவ்வகை மீன்களில் மூன்று அகப்பட்டிருக்கின்றன. 
நிலநடுக்கம் நிகழ்வதற்கு முன் முதலில் அவ்விடத்தை விட்டு அகலும் அறிகுறியாக இவ்வாறு தொடர்ந்து இம்மீன்கள் மேற்பரப்புக்கு வருவதைக் கரு தலாம். 
அல்லது கடலின் வெப்ப நிலை மாறுவதாலும் மீன்கள் தொடர்ச்சியாக மேற்பரப்புக்கு வரலாம்.
இது குறித்து உறுதியான ஆராய்ச்சி ஏதும் நடத்தப்படா விட்டாலும் தோயாமா பேயில் உள்ள நீர்நிலையின் தட்பவெப்ப நிலையில் வழக்கத்திற்கு மாறாக மாற்றம் உள்ளதென்று கூறப் படுகிறது. 
இதுவரை கிடைத்த மீன் களில் திங்கட்கிழமை அன்று சிக்கிய மீனின் நீளம் 394.8 சென்டிமீட்டர். அதன் உடல்  ‘உவொஸு’ மீன் காட்சியகத்தில் இன்றும் நாளையும் பார்வைக்கு வைக்கப் படும்.

இப்பகுதியில் மேலும் செய்திகள்

ஓமான் வளைகுடா பகுதியில் தாக்குதலுக்கு இலக்கான இரு எண்ணெய்க் கப்பல்களில் ஒன்றான ‘கொக்குவா கரேஜியஸ்’ கப்பலுக்கு ஏற்பட்ட சேதம். படம்: ஏஎஃப்பி

15 Jun 2019

எண்ணெய்க் கப்பல்கள் மீதான தாக்குதல்: குற்றச்சாட்டுகளை ஏற்க மறுக்கும் ஈரான்