மலேசியா: கூடுதல் ஊழியர் பாதுகாப்பு

கோலாலம்பூர்: உள்ளூர் மட்டும் அல்லாமல் வெளிநாட்டு ஊழியர்களின் கண்ணியம், பாதுகாப்பு ஆகியவற்றை உறுதி செய்யவேண்டும் என்று மலேசியாவின் மனிதவள அமைச்சர் எம்.குலசேகரன் கூறியுள்ளார்.
இவ்விவகாரம் தொடர்பில் பிரதமர் மகாதீர் முகம்மதுவின் பக்கத்தான் ஹரப்பான் அரசாங் கம் நாட்டின் தொழிலாளர் சட்ட திட்டங்களுக்கு ஏற்ப மாற்றம் செய்யும் என்றும் அவர் குறிப் பிட்டார்.
ஊழியர்களுக்கெனப் பல ஆண்டுகளுக்கு முன்  வகுக்கப் பட்ட இச்சட்டதிட்டங்கள் நடப் பில் இருந்து வந்தாலும் அவற் றில் மாற்றம் செய்யப்பட்டு சட்ட ரீதியாக ஊழியர்கள் கூடுதல் பாதுகாப்பைப் பெறுவது இப் போது அவசியமாகியுள்ளது என்றார் அவர்.
பனை எண்ணெய், கட்டு மானம், உற்பத்தி என மலேசியா வின் விரிவடைந்து வரும் துறைகளில் கூடுதல் சம்பளம் தரப்படுவதால் இந்தோனீசியா, பங்ளாதேஷ் போன்ற வட்டார நாடுகளிலிருந்து திறமையற்ற ஊழியர்கள் படையெடுத்து வரு கின்றனர். 
ஆனால் நாட்டில் இயங்கி வரும் மோசடி வேலைவாய்ப்பு நிறுவனங்கள் இவர்களுக்குப் பொய்யான வாக்குறுதிகளின் அடிப்படையில் வேலை அமைத் துக்கொடுக்கின்றன.
இதனால் வேலை நிரந்தரம் இல்லாமல், போலிஸ் சோதனை களின்போது சிக்குவதுடன், சேமிப்புகளை இழந்து நாடு திரும்பும் நிலைக்கு வெளி நாட்டு ஊழியர்கள் தள்ளப்படு கின்றனர். இந்நிலை இனி மாறும் என்று திரு குலசேகரன் தெரிவித்திருக்கிறார். 

Loading...
Load next