அதிபர் டிரம்ப்: வர்த்தகப் பூசல் முடிவுக்கு வரும்

வா‌ஷிங்டன்: அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப், சீன அதிபர் ஸி ஜின்பிங்கை சந்தித்து இரு நாடு களுக்கும் இடையே நிலவி வரும் வர்த்தகப் போருக்கு முடிவு கட்டும் ஓர் ஒப்பந்தத்தைச் செய்துகொள் வார். இது இம்மாத இறுதியில் வட கொரிய தலைவர் கிம் ஜோங் உன்னை டிரம்ப் சந்திக்கும்போது நிகழலாம் என்று நேற்று டிரம்ப் தெரிவித்தார்.
அதிக முக்கியத்துவம் வாய்ந்த அமெரிக்க, சீன வர்த்தகப் பேச்சு நேற்று முன்தினம் முடிவுற்ற பின் இவ்விவகாரம் தொடர்பில் டிரம்ப் சாதகமாகவே பேசினார்.
தொழில்நுட்பப் பரிவர்த்தனை கள் தொடர்பில் சீனா கட்டாயப் படுத்தும் வரி விதிப்பு பிரச்சினை யில் முன்னேற்றம் தெரிவதாகக் கூறிய டிரம்ப், ஒவ்வொரு நாளும் ஐந்து மில்லியன் டன்கள் சோயா பயிறுகளை சீனா வாங்கி வரு வதை நல்லிணக்கத்தின் அறிகுறி யாகவும் சுட்டி வரவேற்றார்.
இருப்பினும் முடிவாகும் இறுதி ஒப்பந்தம் அனைத்து விவகாரங் களையும் ஒன்றுவிடாமல் குறிப் பிடுவதுடன் ஏதேனும் நிபந்தனை கள் நிறைவேற்றப்படாத பட்சத்தில் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் தெளிவாகக் இருக்கவேண்டும் என்று டிரம்ப் செய்தியாளர் கூட்டத்தில் கூறி னார்.
இரு நாடுகளும் இந்த ஒப்பந் தத்தைச் செய்துகொள்ள மார்ச் ஒன்றுவரை கொடுக்கப்பட்ட கெடு வில் இதுவரை எந்த நீட்டிப்பும் இல்லை என்றும் அவர் குறிப் பிட்டார்.
அக்கெடுவுக்குள் ஒப்பந்தம் செய்யப்படாத நிலையில் சீனப் பொருட்கள் மீதான வரி விதிப்பை அமெரிக்கா திட்டமிட்டபடி 25 விழுக்காடாக உயர்த்தும்.
இதற்கிடையே ஒரு சில விவ காரங்களில் இன்னும் ஒருமித்த முடிவுக்கு வராவிட்டாலும் அந்த நிலை கூடிய விரைவில் மாறிவிடும் என்றும் செய்யப்படவிருக்கும் வர்த்தக உடன்படிக்கையால் இரு நாடுகளுக்கும் நன்மை ஏற்படும் என்றும் கூறினார் அதிபர் டிரம்ப்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!