சமூக ஊடகங்களில் நஜிப்புக்கு கிடைத்துள்ள வரவேற்பு குறித்து தமக்கு கவலை இல்லை என்கிறார் மகாதீர்

புத்ராஜெயா: சமூக ஊடகங்களில் மலேசியாவின் முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக்கிற்கு திடீரென வர­வேற்பு கிடைத்திருப்பது குறித்து தமக்கு எந்தவொரு கவலையும் இல்லை என்று மலேசியப் பிரதமர் மகாதீர் முகம்மது கூறியுள்ளார்.
பக்கத்தான் ஹரப்பான் கூட்டணித் தலைவரான டாக்டர் மகாதீர், தமது கூட்டணிக்கு நஜிப் ஒரு மிரட்டல் அல்ல என்றும் அதனால் அவர் தொடர்ந்து பல மேடைகளில் உரைகள் நிகழ்த்த அரசாங்கம் அனுமதி வழங்கி உள்ளது என்றும் சொன்னார்.
“அதிகமான கதை­களைச் சொல்வதால் சமூக ஊட­கங்களில் நஜிப் பிரபலமாவது­போல தெரி­கிறது,” என்று நேற்று முன்தினம் செய்தியாளர்களிடம் டாக்டர் மகாதீர் கூறினார்.
அரசாங்கத்தின்மீது நஜிப் தொடுக்கும் தாக்குதல்கள், குறிப்­பாக, ரிங்கிட் நாணயத்தின் தொடர் சரிவு குறித்து அவர் எழுப்பும் கேள்விகளை டாக்டர் மகாதீர் தட்டிக் கழித்தார்.
“ரிங்கிட் சரியவில்லை. அமெ­ரிக்க டாலர் வலுவானதுதான் பிரச்சினை.
“ரிங்கிட்டின் மதிப்பை வலு­வாக்க நாங்கள் முயற்சி செய்து வருகிறோம். நாட்டின் பொருளியல் செயல்பாட்டை தீர்மானிக்கும் அம்சமாக அதன் நாணயம் கரு­தப்படக்கூடாது,” என்றார் அவர்.
“தான் சொல்லும் கருத்துகளை இப்போதைய அரசாங்கம் ஏன் செய்யவில்லை என்று வினவும் நஜிப், அவர் ஆட்சியில் இருந்த­போது ஏன் செய்யவில்லை?
“எங்களுக்கு சொல்லும் கருத்துகளை அப்போது அவர் செய்திருந்தால், அவர் இன்னும் பிரதமராக நீடித்திருப்பார்,” என்று டாக்டர் மகாதீர் கூறினார்.
தனது ஆக அண்மைய ஃபேஸ்புக் பதிவு ஒன்றில், கச்சா எண்ணெயின் விலை உயர்ந்து வந்த போதிலும் ரிங்கிட்டின் மதிப்பு தொடர்ந்து சரிவது குறித்து தனது அக்கறையை வெளிப்படுத்தி இருந்தார்.
முன்னதாக, அனைத்துலக எண்ணெய் விலையின் ஏற்ற இறக்கத்திற்கு ஒத்துப்போன ரிங்கிட்டின் மதிப்பிற்கு இப்போதைய போக்கு மாறுபட்டு இருப்பதாக நஜிப் பதிவிட்டு இருந்தார்.

இப்பகுதியில் மேலும் செய்திகள்

திரு அன்வார் இப்ராஹிம்மின் அரசியல் செயலாளர் திரு ஃபர்ஹஷ் முபாரக், படம்: த ஸ்டார்.

20 Jun 2019

“நான் அவன் இல்லை”: சர்ச்சை காணொளி குறித்து இளம் அரசியல்வாதி

அதிபர் தேர்தலில் போட்டியிடுவதற்காக தேர்தல் பிரசாரத்தை அதிகாரபூர்வமாகத் தொடங்கியுள்ள திரு டிரம்ப், “அமெரிக்காவை மீண்டும் சிறந்த இடத்துக்கு உயர்த்துவேன்,” என்று சூளுரைத்துள்ளார். படம்: ராய்ட்டர்ஸ்

20 Jun 2019

தேர்தல் பிரசாரத்தைத் தொடங்கினார் அதிபர் டிரம்ப்