பிலிப்பீன்ஸ் தாக்குதலில் 8 போராளிகள் பலி  

மணிலா: பிலிப்பீன்சின் தெற்குப் பகுதியில் உள்ள மிண்டானோ பகுதியில் சிங்கப்பூர் பயங்கரவாதி உட்பட வெளிநாட்டு பயங்கர வாதிகள் பலர் பதுங்கியிருப்பதாக நம்பப்படும் இடத்தில் பாதுகாப்புப்  படையினர் நடத்திய தாக்குதலில்  எட்டு போராளிகள் கொல்லப் பட்டதாக உயர் ராணுவ அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.     ஆனால் அத்தாக்குதலில் முவாவியா என்று அழைக்கப்படும்  முகம்மது அலி அப்துல் ரஹ்மான் என்ற சிங்கப்பூர் பயங்கரவாதி உயிர் தப்பி அங்கிருந்து தப்பிச் சென்றிருக்கலாம் என்று கருதப் படுகிறது.
  மோரோ இஸ்லாமிய விடுதலை முன்னணியின் ஒரு பிரிவான பங்சமோரோ இஸ்லாமிய  சுதந்திர போராளிகள் குழுவின்  முக்கிய தளமாக கருதப்பட்ட  முகாமில் இரு மலேசியர்கள், இரு இந் தோனீசியர்கள் உட்பட பல  பயங்கரவாதிகள்  பதுங்கியிருந்த தாக நம்பப்படுகிறது.
 அந்த முகாமிற்குள் பாதுகாப்புப் படையினர் வெடிகுண்டு ஒன்றை வெடிக்கச் செய்ததில் போராளிகள் எட்டுப் பேர் கொல்லப்பட்டதாக ராணுவ உயர் அதிகாரி சிரிலிட்டோ சோபியாண்டோ கூறினார். அந்த எட்டுப் பேரின் சடலங்கள் கிடைத்துள்ளதாகவும்   யார், யார் கொல்லப்பட்டனர் என்ற விவரங்கள்  ஆராயப்பட்டு வரு வதாகவும் அவர் சொன்னார்.
இதற்கிடையே சுலு மாநிலத்தில் பாதுகாப்புப் படையினருக்கும் போராளிகளுக்கும் இடையே சனிக்கிழமை நடந்த துப்பாக்கிச் சண்டையில் எட்டு வீரர்களும் மூன்று போராளிகளும்  கொல்லப் பட்டனர்.