வெனிசுவேலா அதிபர் மதுரோவுக்கு எதிராக ஆர்ப்பாட்டம்  

கராக்கஸ்: வெனிசுவேலாவில் அதிபர் நிக்கோலஸ் மதுரோவுக்கு  ஆதரவாக ஒரு குழுவினரும் அவருக்கு எதிராக ஒரு குழுவினரும் தொடர்ந்து ஆர்ப் பாட்டங்களில் ஈடுபட்டு வரு கின்றனர்.  
  வெனிசுவேலாவில் நடந்த தேர்தலில்  மதுரோ மீண்டும் வெற்றி பெற்று இம்மாத தொடக் கத்தில் மீண்டும் அதிபராகப் பொறுப்பு ஏற்றுக்கொண்டார். ஆனால், மே மாதத் தேர்தலை எதிர்க்கட்சி ஒன்று புறக்கணித்தது. தேர்தலில் முறைகேடுகள் நடந்த தாகவும் புகார்கள் எழுந்தன. மதுரோவின் தேர்தல் வெற்றியை ஏற்க மறுத்த எதிர்க்கட்சித் தலை வரும் தேசிய சட்டமன்றத்  தலைவருமான ஜுவான் குவைடோ, தன்னை  தற்காலிகத் தலைவராக அறிவித்துக்கொண்டார்.
 போராட்டத்துக்கும் அவர் அழைப்பு விடுத்தார். அவர் தற்காலிக அதிபராவதற்கு  அமெரிக்காவும் வேறு சில  லத்தின் அமெரிக்க நாடுகளும் ஆதரவு தெரிவித்துள்ளன. ரஷ்யாவும் சீனாவும் மதுரோவுக்கு ஆதரவு  தெரிவித்து வருகின்றன. அங்கு புதிய தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்று பிரான்சும் பிரிட்டனும் கூறியுள்ளன.