திட்டமிட்ட தேதியில் பிரிட்டன் வெளியேறுவது  உறுதி

லண்டன்: ஐரோப்பிய ஒன்றியத் திலிருந்து பிரிட்டன் திட்டமிட்ட தேதியில் வெளியேறுவதில் பிரிட்டிஷ் பிரதமர் தேரேசா மே மிகவும் உறுதியுடன் இருப்பதாக  தகவல்கள் வெளியாகியுள்ளன.
பிரசல்ஸில் ஐரோப்பிய  ஒன்றியத் தலைவர்களுடன் பேச்சு நடத்தவிருக்கும் தெரேசா மே, புதிய அதிகார உரிமை,  புதிய யோசனை, மற்றும் புதிய தீர்மானத்துடன் பிரசல்ஸ் செல்ல விருப்பதாகக் கூறியதாக  பிரிட்டிஷ் நாளேடு ஒன்று செய்தி  வெளியிட்டுள்ளது.
அடுத்த மாதம் மார்ச் 29ஆம் தேதி ஐரோப்பிய ஒன்றியத் திலிருந்து பிரிட்டன் வெளியேற வேண்டும். ஐரோப்பிய ஒன்றிய அமைப்பிலிருந்து பிரிட்டன் வெளியேறுவதற்கு ஆதரவாக பிரிட்டிஷ் மக்கள் வாக்களித்த பின்னர் அது தொடர்பில் பேச்சு நடத்த ஈராண்டு கால வரம்பு நிர்ணயிக்கப்பட்டது.  
ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிட்டன் வெளியேறிய பிறகு ஐரோப்பிய ஒன்றிய நாடுகளு டனான  பிரிட்டனின் எதிர்கால வர்த்தக தொடர்பு குறித்து இருதரப்பும் பல முறை பேச்சு நடத்திய பின்னர்  இறுதியில் ஓர் உடன்பாடு காணப்பட்டது.