மாயமான விமானச் சிதைவுகள் கண்டெடுப்பு; காற்பந்தாளர் சாலாவுக்கு அஞ்சலி

இங்கிலிஷ் நீரிணைக்கு அருகே திடீரென மாயமான விமானம் ஒன்றின் சிதைவுகள் கண்டுபிடிக்கப்பட்டதாகத் தேடுதல் பணிகளை வழிநடத்திய கடல்துறை விஞ்ஞானி தெரிவித்துள்ளார். 

மேற்கு ஃபிரான்சிலுள்ள நன்டேஸ் நகரிலிருந்து பிரிட்டனின் கார்டிஃப் நகரை நோக்கிச் சென்றுகொண்டிருந்த அந்த விமானம் கடந்த மாதம் 21ஆம் தேதி

கடலுக்குள் விழுந்ததாக நம்பப்படுகிறது. சம்பவத்தின்போது விமானத்தில் அர்ஜன்டினாவைச் சேர்ந்த 28 வயது காற்பந்தாளர் சாலாவும் விமானி டேவிட் இபோட்சனும் இருந்தனர்.

‘கார்டிஃப் சிட்டி’ காற்பந்து குழுவில் சேரவிருந்த சாலாவுக்காக ரசிகர்கள், அந்தக் குழுவின் விளையாட்டு அரங்கத்திற்கு வெளியே மலர்களையும் மெழுதுவர்த்திகளையும் வைத்து தங்கள் அஞ்சலியைச் செலுத்தினர்.

Loading...
Load next