பிலிப்பீன்ஸ் தேவாலயத் தாக்குதல்: முக்கிய சந்தேக நபர் சரணடைந்தார்

மணிலா: தென் பிலிப்பீன்ஸிலுள்ள தேவாலயம் ஒன்றில் கடந்த மாதம் நடந்த இரண்டு வெடிகுண்டு தாக்குதல்களுடன் தொடர்புடைய முக்கிய சந்தேக நபர் ஒருவர் போலிசாரிடம் சரண் அடைந்திருக்கிறார்.

சூலு மாநிலத்திலுள்ள ஜோலோ தீவில் ஜனவரி 27ஆம் தேதி நடந்த அந்தத் தாக்குதலில் 22 பேர் மாண்டதுடன் 100க்கும் அதிகமானோர் காயமடைந்ததாகக் கூறப்படுகிறது. ‘கமா’ என்ற பெயரைக் கொண்ட அந்தச் சந்தேக நபரும் மேலும் நால்வரும் ஜோலோவிலுள்ள போலிஸ் நிலையம் ஒன்றில் சரண் அடைந்திருப்பதாக சின்ஹுவா செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

பிலிப்பீன்ஸில் பல்லாண்டுகளாகப் பயங்கரவாதத் தாக்குதல்களை நடத்தி வரும் அபூ சயஃப் குழுவின் கிளையான அஜாங்-அஜாங் பிரிவில் கமா உறுப்பினராக இருக்கிறார் எனச் சந்தேகிக்கப்படுகிறது.