அதிவேக ரயில் தடத்தில் விழுந்தும் உயிர் தப்பிய சிறுவன்

சீனாவின் ஹுபெய் மாநிலத்திலுள்ள ரயில் நிலையம் ஒன்றில் மூன்று வயது சிறுவன் அதிவேக ரயில்கள் செல்லும் தடத்திற்குள் விழுந்துவிட்டான். ஆயினும், தக்க நேரத்தில் ரயில் நிலைய ஊழியர் ஒருவர் அவனைக் காப்பாற்றியதாக சீன ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

வூச்சாங் ரயில்வே நிலையத்தில் நின்றுகொண்டிருந்த ரயிலுக்கு முன் அந்தச் சிறுவனை அவன் தாயார் புகைப்படம் எடுத்துக்கொண்டிருந்தார். அப்போது, பின்னால் ஓர் அடி எடுத்து வைக்கும்படி சிறுவனிடம் தாயார் கூறினார். சிறுவனும் அவ்வாறு செய்தபோது, கால் இடறி ரயிலுக்கும் தளமேடைக்கும் இடையிலிருந்த இடைவெளிக்குள்ளாகத் தடத்தின்மீது விழுந்தான். 

ரயில் நிலைய ஊழியர் ஒருவர் உடனடியாக விரைந்து சென்று, கதறிக்கொண்டிருந்த சிறுவனுக்கு உதவிக்கரம் நீட்டினார். சம்பவத்தில் சிறுவனுக்கு எந்தக் காயமும் ஏற்படவில்லை. ரயில் சேவையும் தடைப்படவில்லை.

இப்பகுதியில் மேலும் செய்திகள்

கிறைஸ்ட்சர்ச் நகரின் அல் நூர் பள்ளிவாசலின் முன்பு நடைபெற்ற மாபெரும் சிறப்புத் தொழுகையிலும் மௌன அஞ்சலி நிகழ்விலும் பிரதமர் ஜெசிண்டா ஆர்டன் முக்காடு அணிந்து பங்கேற்றார். படம்: ராய்ட்டர்ஸ்

23 Mar 2019

நாடளாவிய மௌன அஞ்சலி