பிரபோவோ பொய் கூறுகிறார்: குற்றம் சுமத்தும் ஜோகோவி

ஜகார்த்தா: இந்தோனீசியாவின் அதிபர் தேர்தலுக்கு முந்திய வேட்பாளர்கள் விவாதம் நடை பெற்று வருகிறது.
இரண்டாவது விவாதம் நெருங்கி வருகையில், தம்மை எதிர்த்துப் போட்டியிடும் பிரபோ வோ சுபியாந்தோ மீது குற்றம் சுமத்தியுள்ளார் இந்தோனீசிய அதிபர் ஜோகோ விடோடோ.
திரு பிரபோவோ பல பொய் களைக் கூறி வருவதாக அதிபர் ஜோகோவி குறை கூறியுள்ளார்.
இந்தோனீசியாவின் தற் போதிய ஆட்சி முறை நீடித்தால் இந்தோனீசியா அழிந்துவிடும் என்று திரு பிரபோவோ கூறியிருந் ததை அதிபர் ஜோகோவி சாடி னார்.
தேர்தலுக்குத் தயாராக வெளிநாட்டு ஆலோசகர்களைத் தாம் பயன்படுத்துவதாக திரு பிரபோவோ கூறியிருப்பதில் எவ்வித உண்மையும் இல்லை என்றார் திரு ஜோகோவி.
நிதி அமைச்சர் ஸ்ரீ முல்யாணி இந்திராவதி இந்தோனீசியாவின் கடன் சுமையை அதிகரிப்பதாக திரு பிரபோவோ அண்மையில் தெரிவித்திருந்தார்.
இதை அதிபர் ஜோகோவி ஏற்க மறுத்துள்ளார். திரு பிரபோவோவுக்குப் பொருளியல் விவகாரங்கள் பற்றி தெரியவில்லை என்றார் அவர்.
தேர்தலை முன்னிட்டு நடத்தப் படும் இரண்டாவது விவாதம் இன்னும் இரண்டு வாரங்களில் நடைபெற உள்ளது.
இதில் உணவு, எரிசக்தி, இயற்கை வளங்கள், சுற்றுப்புறம், உள்கட்டமைப்பு ஆகிய விவகாரங் கள் குறித்து அதிபர் ஜோகோவியும் திரு பிரபோவோவும் விவாதம் செய்ய இருக்கின்றனர்.
“பொய்களை அடுக்கிக் கொண்டே போகக்கூடாது,” என்று திரு பிரபோவோவின் ஆதரவளார்களைச் சாடினார் அதிபர் ஜோகோவி. பொய்யான தகவல் பரப்பிய குற்றத்தில் ஈடுபட்டு வருவதாக திரு பிரபோவோவின் ஆதரவாளர்கள் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. 
 

Loading...
Load next