அமைதி, நல்லிணக்கம் காக்க மகாதீர் வலியுறுத்து

புத்ராஜெயா: நாட்டின் நிலைத் தன்மை, அமைதி, நல்லிணக்கம் ஆகியவற்றைப் பாதுகாக்க வேண்டும் என்று மலேசியர் களுக்கு நினைவூட்டியுள்ளார் மலேசியப் பிரதமர் டாக்டர் மகாதீர் முகம்மது.
சீனப் புத்தாண்டு வாழ்த்து களைத் தெரிவிக்க டாக்டர் மகாதீர் நேற்று காணொளி ஒன்றை வெளியிட்டார். அதில் இக்கருத்துகளை அவர் வலியுறுத்தினார். 
பல்லின, பல சமய மக்கள் ஒன்றாக வாழும் நாடு மலேசியா என்றும் ஒரே மண்ணில் பல இனத்தவர்களின் கலாசாரத்தை அனுபவிக்கும் அதிர்ஷ்டம் மலேசியர்களுக்குக் கிடைத் துள்ளதாகவும் அவர் கூறினார்.
மலேசியாவின் பல்லின மக்கள் தற்போது ஒற்றுமையாக, அமைதியுடன் வாழ்ந்து வருவதை டாக்டர் மகாதீர் சுட்டினார். ஆனால் இது தொடரும் என மலேசியர்கள் மெத்தனத்துடன் இருந்துவிடக்கூடாது என்று அவர் எச்சரிக்கை விடுத்தார்.
நாட்டில் நிலவி வரும் அமைதியையும் பல இனத்த வர்களிடையே உள்ள நல்லிணக் கத்தையும் சீர்குலைக்க சில கட்சிகள் முயன்று வருவதாக அவர் குற்றஞ்சாட்டினார்.
இத்தகையோரின் பேச்சைக் கேட்டு மலேசியர்கள் செயல்படக் கூடாது என்று டாக்டர் மகாதீர் கேட்டுக்கொண்டார். 
விழாக்காலங்களைப் பயன் படுத்தி குடும்பத்தினருடனான உறவுகளை மட்டுமின்றி நண்பர் கள், பிற மலேசியர்களுடனான நல்லுறவையும் வலுப்படுத்த வேண்டும் என்றார் அவர்.