நியூசிலாந்தில் காட்டுத் தீயில் வீடுகள் சேதம்

நியூசிலாந்தின் கிழக்குத் தீவில் பல்லாயிரக்கணக்கான ஹெக்டர் பரப்பளவு கொண்ட நிலத்தில் காட்டுத் தீ பரவியதை அடுத்து கிட்டத்தட்ட 100 வீடுகள் சேதமடைந்துள்ளன.

நெல்சன் நகரிலுள்ள ‘பெகியன் வேலி’ எனும் பள்ளத்தாக்குப் பகுதியில் இந்தப் பெருந்தீ மூண்டதாக அந்நகர அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். வீடுகளிலிருந்து வெளியேறியவர்கள் தற்போது தீயணைப்பு நிலையங்களிலும் நிவாரண முகாம்களிலும் தஞ்சம் புகுந்திருப்பதாகக் கூறப்படுகிறது.

காயமடைந்தோர் பற்றிய எந்தத் தகவலும் இதுவரை வெளிவரவில்லை. 12 நிலையங்களைச் சேர்ந்த தீயணைப்புப் படைகள், 10 ஹெலிகாப்டர்கள், இரண்டு விமானங்கள் ஆகியவை தீயை அணைக்கப் பயன்படுத்தப்படுவதாகத் தீயணைப்பாளர்கள் கூறுகின்றனர்.