மகாதீர்: அமைச்சரவை மாற்றம் பற்றிய வதந்தி பொய்யானவை

மலேசிய பிரதமர் மகாதீர் முகம்மது தமது அமைச்சரவையில் தற்போதைக்கு எந்த மாற்றங்களையும் செய்யப்போவதில்லை என்று அறிவித்திருக்கிறார். நிதியமைச்சர் லிம் குவான் எங் நடத்திய சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டத்தின்போது பேசிய டாக்டர் மகாதீர், “அமைச்சரவை மாற்றம் குறித்த செய்தி போலியானவை,” என்று தெரிவித்தார்.

சீனப் புத்தாண்டுக்குப் பிறகு மலேசிய அமைச்சரவை மாற்றப்படும் என்று இணைய வலைத்தளம் ஒன்று குறிப்பிட்டதை அடுத்து இது குறித்த வதந்திகள் பரவின.