பாலி குடிநுழைவு அதிகாரியைத் தாக்கிய பிரிட்டிஷ் பெண்ணுக்கு சிறைத்தண்டனை

பாலியில் குடிநுழைவு அதிகாரி ஒருரை அறைந்த பிரிட்டிஷ் பெண்ணுக்கு இந்தோனீசிய நீதிமன்றம் ஆறு மாத சிறைத்தண்டனையை விதித்துள்ளது. 

கடந்தாண்டு ஜூலையில் 43 வயது அவுஜெ தக்காடாஸ் என்ற அந்தச் சுற்றுப்பயணி, விசா அனுமதி காலத்தைக் கடந்து பல மாதங்கள் தங்கியிருந்ததால் 4,000 அமெரிக்க டாலரை அபராதமாகக் கட்டவேண்டும் என்று விமான நிலையத்தில் அவரிடம் கூறப்பட்டது. 

அதனால் கோபமடைந்த அவர், அங்கிருந்த அதிகாரி ஒருவரை அறைந்தார். அவர் அவ்வாறு செய்ததைக் காட்டும் காணொளி ஒன்று  தற்போது சமூக ஊடகங்களில் பரவி வருகிறது.

இந்தத் தண்டனைக்கு முன்னர் அவர் கைது செய்யப்படவில்லை.

Loading...
Load next